Home செய்திகள் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியில் இலங்கை- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றது.

இலங்கையில் இதுவரை நிலையாக பேணப்பட்டு வந்த அமெரிக்க டொலர், கடந்த வாரம் முதல் நெகிழ்வு போக்குடன் தீர்மானிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

டொலருக்கான தட்டுப்பாடு அதிவுயர் மட்டத்தை அடைந்த பின்னணியிலேயே, இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எட்டியது.

இலங்கை மத்திய வங்கியின் இந்த தீர்மானம் அமலாக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் எண்ணி பார்க்க முடியாதளவு திடீரென அதிகரித்திருந்தது.

அதைத்தொடர்ந்து எரிபொருட்களின் விலை அதிகரிக்கத்தொடங்கியது. அதே போல் தற்போது பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் டொலர் நெருக்கடியால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13) பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன, இன்று (15) முதல்  பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version