சிங்கப்பூரிடம் கடனுதவி வழங்குமாறு இலங்கை கோரிக்கை

சிங்கப்பூரிடம் கடனுதவி

சிங்கப்பூரிடம் இருந்து பிரிட்ஜ் லோன் என்ற இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

இடைக்கால நிதியுதவியைப் பெறுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உதவிகளை இதன்போது அமைச்சர் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரியதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamil News