336 Views
அரிசி வழங்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை
எதிர்கால நுகர்வுக்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை பங்களாதேஷிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுத்தருமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.நட்பு நாடு என்ற ரீதியில் இயன்றளவு உதவிகள் வழங்கப்படும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.