Tamil News
Home செய்திகள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு கனடாவுடன் இலங்கை மீண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு கனடாவுடன் இலங்கை மீண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கனடாவுடன் இலங்கை மீண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கனடாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மீண்டும் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கனடாவிலுள்ள உலக பல்கலைக்கழக சேவையானது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பின்தங்கிய பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 30 ஆண்டுகளாக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. கோவிட் 19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 வருடங்களாக இலங்கையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கனடாவிலுள்ள உலக பல்கலைக்கழக சேவையுடன் 2020 – 2027 காலப்பகுதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடப்படவுள்ளது.

அதன்படி, 10 அரசாங்கங்களின் கீழ் உரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Exit mobile version