சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது! அமைச்சரவையில் எதிர்ப்பு

இலங்கை நிதியுதவி கோராதுசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோருவதற்கான அமைச்சரவைக் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது. இதனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது என்று தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச் சரவை கூட்டத்தில் சர் வதேச நாணய நிதி யத்திடம் நிதி உதவி கோருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனை களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லா மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது. அரசாங்கம் கோரினால் இலங்கைக்கு நிதி அளிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் மசா ஹிரோ நோசாகி கூறியிருந்தார்.

இந்நிலை யில், அது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய அமைச்சரவை இணக்கமின்றி நிறை வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக் கது.