Tamil News
Home செய்திகள் இலங்கையை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது- முன்னாள் கணக்காய்வாளர்

இலங்கையை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது- முன்னாள் கணக்காய்வாளர்

இலங்கையை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது

இலங்கையை அமெரிக்கா, சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது. 2500 ஆண்டுகளாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது. சுனாமியின் இரண்டாவது அலை வருமென நான் இதற்கு முன்னர் எச்சரித்திருந்தேன். தற்போது இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டது. இதனை செப்டம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும்.

நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். இலங்கையை அமெரிக்கா, சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றி விடலாம், ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது. 2500 ஆண்டுகளாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது.

இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்தியா வழங்கும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நாட்டிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும்”  என்றார்.

Exit mobile version