Tamil News
Home செய்திகள் பௌத்த மற்றும் நிதியுதவித் திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணக்கம்

பௌத்த மற்றும் நிதியுதவித் திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணக்கம்

15 மில்லியன் டொலர் பெறுமதியான விசேட இந்திய நிதியுதவியில் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் யாழ் கலாசார நிலையத்தின் செயற்பாடு உள்ளிட்ட கூட்டாக அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிதியுதவியின் ஊடாக நாடு முழுவதும் உள்ள துறவிகள் பயிற்றுவிக்கும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரிவேனாக்கள் அல்லது பாடசாலைகளில் சூரிய சக்தி வசதிகளை நிறுவுவது தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டது.

Exit mobile version