இலங்கை- 10 நாட்களுக்கான எரிபொருள் இருப்பு, ஆறே நாட்களில் தீர்ந்து போனதாக தகவல்

இலங்கையில் 10 நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய அளவிலான எரிபொருளை, 6 நாட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்திதுறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

அடுத்த இரண்டு வாரங்களில், அத்தியாவசமாகத் தேவையான அளவு எரிபொருள் இலங்கைக்கு வருகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், தொடர்ந்து பேசும்போது, அதிகப்படியான தேவை இருப்பதால் மொத்த இருப்பும் ஆறே நாட்களில் தீர்ந்து போயுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளுக்கான கார்கோவுக்கு அமைச்சரவை பணம் செலுத்தியுள்ளது. எரிபொருளைக் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டத்தை குறைப்பதற்கான எங்களிடம் திட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil News