Home உலகச் செய்திகள் பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்-வீடுகளை இழந்து மக்கள் பாதிப்பு

பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்-வீடுகளை இழந்து மக்கள் பாதிப்பு

வெள்ளக்காடானது


கர்தோம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடானது. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளன. அங்கு அகதிகள் உட்பட 2.88 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு சூடானில் 4.26 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

‘சூடானில் ஏற்கெனவே வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் இன்னும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளனர். முகாம்களில் மலேரியா தொற்று பரவி வருகிறது. 150 அகதிகளுக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டு உள்ளது’ என, ஐ.நா. தெரிவித்துள்ளது.

Exit mobile version