நிதியில்லாததால் விமானப் போக்குவரத்தை நிறுத்தும் தென்னாபிரிக்கா

விமானப் போக்குவரத்தை நிறுத்தும் தென்னாபிரிக்கா

பிரித்தானியாவின் விமான சேவையை (British Airways) நடத்திவரும் தொன்னாபிரிக்காவின் கொமைர் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக விமான சேவைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் குலுலா என்ற உள்ளூர் விமான சேவையையும் நடத்தி வருகின்றபோதும், அதனையும் நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இரு சேவைகளுக்குமான பயணச்சீட்டுக்களை வழங்குவதையும் அது நிறுத்தியுள்ளது.

எமது விமான சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்குரிய நிதியை திரட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம், நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் உண்டு. எனினும் கிடைக்காதுவிட்டால் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என அந்த நிறுவத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு கோவிட்-19 நோயின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இந்த நிறுவனம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நிதியை திரட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இந்த வருடம் அது 26 விமானங்களையே சேவையில் ஈடுபடுத்தி வந்தது.

இந்த நிறுவனத்தின் வீழ்ச்சி என்பது தென்னாபிரிக்காவின் விமானப்போக்குவரத்தில் 40 விகித பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News