Home செய்திகள் அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது |...

அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்

2 1 அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்

அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது

அவசர கால சட்டத்திலும் சிலரைக் கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப் பட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் அளிப்பதில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வ தேச ஆதரவு நாளை முன்னிட்டு சித்திரவதை யால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எந்தள விற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது? எவ்வாறு ஆதரவைப் பெருக்கிக்கொள்ளலாம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல்,“தமிழ் மக்கள் சித்திரவதைப்படுத்தப்படு வது என்பது இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே இது நடந்திருக்கின்றது. எப்பொழுதெல்லாம் சந்தர் ப்பம் கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் கொடூரமாக சித்திரவதைப் படுத்த ப்பட்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களை வேற்றாராக பார்க்கின்ற சுபாவம் சிங்கள ஆதிக்கப் பொலிஸாரிடமும், இராணுவத்தி டமும் இருந்திருக்கின்றது.
உதாரணமாக நெடுங்காலமாகவே அதாவது யுத்தம் இல்லாது, சமாதானம் இருந்த காலத்திலேயே 1950, 1960 களில் வடக்கிற்கும் தெற்கிற்குமாக இருந்த ஆனையிறவு நிலப்பரப்பில் சோதனைச்சாவடி அமைத்து கடத்தல்களை தடுப்பதென்ற போர்வையில் வருகின்ற தமிழ் மக்களை மறித்து பலவிதமாக துன்புறுத்தல் நடந் திருக்கின்றது.

எண்ணிக்கை அளவில்லாத இளைஞர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் கூட பொலிஸாரால் , இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, தமிழ் மக்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் சிறையில் வைக்கப்பட முன்னர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டன. இதனைப் பெறுவதற்காகவே அவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள். சில வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்ப ட்டன. ஆனால் பல வழக்குகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அனுமதிக்கப்பட்டு தண்டனை பெற்ற சம்பவங்களும் இருந்திருக்கின்றது.

ஆனால் சட்டத்திற்கும் , நியாயத்திற்கும் உட்படாமல் சித்திரவதைகள் நடந்திருக்கின்றன. இது ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டாலே ஒருவர் சித்திரவதை க்குட்படுத்தப்படுவர் என்பது நிச்சயம். அத்துடன் தமிழ் பெண்கள் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான அதிக சம்பவங்கள் வெளியே வருவதில்லை.

உதாரணமாக நானே கையாண்ட ஒரு வழக்கு 1996, 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாருக்கு இடம்பெயர்ந்து வந்திருந்த இரண்டு யுவதிகளை பள்ளிமுனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸாரும், கடற்படையினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வுக்குட்படுத்தியிருந்தார்கள். இத்தகவல் நிருபராலும், அப்போதைய ஆயராக இருந்த இராயப்பு ஜோசப் அவர்களாலும் வெளிக்கொண்டு வரப்ப ட்டது. அவர்களைச் சித்திரவதை செய்தது மட்டுமல்லா மல் தற்கொலை குண்டுதாரிகளாக சித்தரித்து நீதிமன்றிலே பாரப்படுத்தி விளக்கமறியலில் இட்டார்கள். பின்னர் அந்த நீதிமன்றிலே துன் புறுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர் கள் குற்றவாளிகளாக மன்னார் நீதிமன்றிலே அடை யாளம் காணப்பட்டார்கள்.

சமீபகாலத்தில் வடகிழக்கில் பல இடங்களில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவ ர்கள் என கூறி கைது செய்யப்பட்டவர்கள் கொடூர மான முறையில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இரணைமடு முகாம் அது ஒரு சித்திரவதை முகாம் தான். தற்சமயத்தில் கூட அங்கே சித்திரவதைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவைகள் வழக்குகள் மூலம் சில விடயங்களை வெளிக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எனவே சித்திரவதை இங்கே ஒன்றும் புதிதல்ல. பாரிய அளவில் நடைபெற்றுக்கொண்டி ருக்கின்றது. யார் அதனை விசாரிப்பது? அதாவது இராணுவத்தினரும், பொலிஸாரும் செய்த விடயங்களை விசாரிக்க கூறுவது அவர்களையே, அதாவது குற்றம் செய்தவர்களையே விசாரணை செய்ய நியமிக்கப்படுவார்கள். அது எவ்வாறு முடி யும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

சித்திரவதை என்பது உலக அளவில் தடை செய்யப்பட்ட ஒரு விடயம். எந்த சந்தர்ப்பத்திலும் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பது எங்க ளுடைய அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்திய காலத்திலும் சிலரை கைது செய்யலாம.; ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான பலனும் அளிப்பதில்லை.

பொலிஸாரும், இராணுவத்தினரும், அர சியல் வாதிகளும் இதை பற்றிச் சிந்திப்பதுமி ல்லை. தமிழ் மக்கள் என்றாலே அவர்கள் அதிகார பூர்வமாக சித்திரவதைப்படுத்த கூடியவர்கள். அது வடகிழக்கில் உள்ளவர்கள் அத்துடன் மலையக த்திலுள்ளவர்களுக்கும் அது பொருந்தும்.

எனவே இவை அனைத்தையும் பார்க்கும் போது இலங்கை நாடு என்பது சட்டம் சரிசமமாக, நியாயமாக பிரயோகிக்கப்படுவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு என்று ஒரு சட்டம் என்றே இங்கு காணப்படுகின்றது. சித்திரவதையின் சரித்திரம் இதுதான். இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக சிங்கள மக்களுக்கு , தமிழ் மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் இந்த சித்திரவதையை அவர்கள் மீது மேற்கொள்ளத் தூண்டியிருக்கின்றது. இதற்கு சட்டமோ, நீதிம ன்றங்களோ தமிழ் மக்களுக்கு இல்லை என்பது தான் வெளிப்படையாக தெரிகின்றது” என்றார்.

Exit mobile version