வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்

தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்

தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது.

நேற்று (05) இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென்று இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி  அழிந்துள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tamil News