Tamil News
Home செய்திகள் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன

டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை. இதனையடுத்து, சமூக ஊடகங்கள் இன்று அதிகாலை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் நேற்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சூழலில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். அத்துடன், இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டத்தின் போது அத்தியாவசிய சேவைகளுக்காக தவிர இலங்கையர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்தநிலையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கான பயன்பாடு முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version