Home Blog

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் ஆசிரியர் தலையங்கம்
  • மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் ரகசியத் திட்டம்!அகிலன்
  • மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
  • போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
  • ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
  • இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
  • மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்!

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மே தினத்தின் வித்தாக அமைந்தது.

இந்த அலை உலகெங்கும் பரவி, 1889-ல் பெரிஸில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1-ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், உலகெங்கும் இன்று மே தினம் நினைவு கூரப்படுகின்றது. அதே நேரம், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) அறிவித்துள்ளது.

இன்றைய மேதின கூட்டங்கள் தொடர்பில் NPP வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 241 மனித எச்சங்கள் அடையாளம்

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம், தொடர்ச்சியாகப் பல்வேறு எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை 240 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வின் போது நாணயத்தை ஒத்த ஒரு சான்றுப் பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது, ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதிகளில் உள்ள மணலை அரித்தெடுத்து ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அரசாங்கம் செல்வந்தர்களின் கைப்பாவையாக மாறியுள்ளது – மகேஷ் சேனாநாயக்க சாடல்

76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77வது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை (30) எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய ஒற்றைத் தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களின் உரிமைகளைக் கத்தரித்து, உயர்மட்ட வர்த்தக சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றவே உருவாக்கப்பட்டுள்ளதாகச் சாடினார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கத் தவறியுள்ளதோடு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் காவலன் எனக் கூறிக்கொண்ட ஜனாதிபதி இன்று செல்வந்தர்களின் ஒரு கைப்பாவையாக மாறியுள்ளதாகவும், அரசாங்கத்தின் இத்தகைய போக்கினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிற்கு மக்களைத் திரட்டும் பலம் இல்லாத காரணத்தினால், வழமையான பொய்களைக் கூறி கிராம மட்டங்களில் சிறிய மே தினக் கூட்டங்களை நடத்த அரசாங்கம் முற்படுவதாகவும், இந்த மே தினம் தேசிய மக்கள் சக்திக்கு உரிய ஒன்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளமை குறித்து அரசாங்கம் எவ்விதப் பொறுப்பும் கூறவில்லை எனத் தெரிவித்த மகேஷ் சேனாநாயக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல்களை ஐக்கிய மக்கள் சக்தியே முதலில் வெளிப்படுத்தியதாக நினைவு கூர்ந்தார். முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எரான் விக்கிரமரத்ன மீது விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி, இறுதியில் கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைக்க சஜித்தின் நிபுணரான எரானையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் எள்ளி நகையாடினார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ‘கூட்டு எதிர்க்கட்சி’ என்ற பெயரில் செயற்படும் குழுவினருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்த அவர், நாட்டின் உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்படவே மக்கள் தற்போது ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மே தினத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாமர சம்பத்

தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், மே தினக் கூட்டங்களைச் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம் என அவர் குற்றம் சுமத்தினார்.

குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணி நுவரெலியாவில் நடத்தும் கூட்டத்திற்காகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை வழங்கி, அவர்களை ஏமாற்றி அழைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான போலித்தனமான அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் மே தினத்தில் கொழும்பு, கேம்பல் மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்தும் என்று அவர் சவால் விடுத்தார்.

இக்கூட்டத்தில் சுமார் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இதற்காகத் தாம் ஏற்கனவே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று மக்களைத் திரட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் மக்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

தமது கட்சியானது 1974ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஜனாதிபதிகளை உருவாக்கிய நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டிய சாமர சம்பத், அரசாங்கத்தின் மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றார்.

மே தின மேடையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சுமார் 25 முதல் 30 வரையிலான அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள் என்றும், உண்மையான மக்கள் எழுச்சி எது என்பதை அன்று அரசாங்கம் புரிந்துகொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் நிலையில் அதனை எதிர்த்த இந்த ஆட்சியாளர்கள் புதன்கிழமை (29)  பாராமுகமாக இருந்துவருவதாக மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், மாணவர்கள் இந்த துண்ப்பிரசுரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவசக்கல்வியை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மக்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சிஸ்டம் சேஞ் என்ற கோசத்துடன் ஆட்சிக்குவந்த இந்த அரசாங்கத்திற்கும் கடந்தகால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லையென்பதை மக்கள் உணரத்தொடங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் நிலைகளினால் கல்வித்துறை,சுகாதார துறை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியதுறை பாரிய ஆபத்து நிலையினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக இதன்போது மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

 

ஞானசார தேரருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு…

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இத்தாலிய தூதுவர் இடையே சந்திப்பு

 பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த இத்தாலிய தூதுவர்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார்.

இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர் மிகவும் உஷ்ணமாக வரவேற்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியமான இருதரப்பு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்த தூதுவர் பிராங்கோவிக், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 29ம் திகதி புதன்கிழமை அன்று (29-04-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன்,எம்.ஜெகதீஸ்வரன் , திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் நகர சபை , பிரதேச சபை, ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, அபிவிருத்தி குழுவின் அனுமதி பெற்று விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான அங்கீகாரம் இதன்போது வழங்கப்பட்டது.மன்னார் பகுதியில் உள்ள குறை குளம் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டத்தில் கடுமையான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை கண்டறியுமாறு இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.மன்னார் தீவுப் பகுதியில் அண்மைக்காலமாக கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.

அதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், மன்னார் மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையான கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இவற்றுடன் மாவட்டத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

செம்மணியில் மீண்டும் மனித எலும்பு கூடுகள் மீட்பு!

செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை ஏற்கனவே வடமேற்கு பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் எத்தனை எலும்பு தொகுதிகள் காணப்படுகின்றன என்பது சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தெரியவரும்.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையின்படி இந்த அகழ்வு 1.5 அடியிலிருந்து 2 அடி ஆழமான நிலத்தில் தான் இதுவரை காலமும் என்பது தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

ஆகவே அகழ்வு பணிகளின் ஆழமானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போதே தீர்மானிக்கப்படும்.

ஸ்கான் பரிசோதனை செய்யப்படும்போதும் தெரிவு செய்யப்பட்ட பகுதியை அந்த ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதோடு, ஏனைய இடங்களில் என்பு தொகுதிகள் இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

குறித்த பகுதியில் உள்ள மண்ணானது கறுப்பு நிறத்தில் இருப்பதால் அதில் ஏதாவது சான்று பொருட்கள் இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்வதற்காக மண்ணினை அரித்து எடுக்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

நவீனமயமாகும் இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள், இன்று வியாழக்கிழமை (30) பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

சுங்க நடவடிக்கைகளில் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலை மேம்படுத்தும் நோக்கில் சரக்கு பரிமாற்ற கண்காணிப்பு முறைமை, சுங்க பணம் அனுப்பும் இணைய நுழைவாயில்,   மின்னணு கப்பல் சேவை கட்டண முறைமை போன்ற புதிய சேவைகள் இதன்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க,  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.