“எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” – காசிப்பிள்ளை ஜெயவனிதா

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்1எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்

சிறீலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டும், கடத்தப் பட்டும், காணாமல் ஆக் கப்பட்டும் உள்ள தமது உறவு களுக்காக வவுனியாவில்  போராட்டப் பந்தல் அமைத்து,  இரவு – பகலாக பல எதிர் பார்ப்புகளுடன் 1600 நாட்களைக் கடந்து  அவர்களின் உறவினர்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்3

கொட்டும் மழையிலும்,  அனல் வெயிலிலும்   மகளே…!, மகனே…! என்று  கதறி அழைக்கும் அந்த உறவுகளின் குரல்கள் எவர் செவி களிலும் இது வரையில் விழவில் லைப் போலும்.

“கடத்திச் செல்லப் பட்ட மகள் எங்கே? இந்த தேசத்தில் எங்கே இருக்கிறாள்? மகளே! நலமாய் இருக்கிறாயா? நீ எப்படி யம்மா இருக்கிறாய்? உன்னை தேடிய லையும் என் குரல் உன்னை எட்ட வில்லையா? வந்து விடு மகளே..” என நா வரண்டு வார்த்தைகள் தடுமாறி விக்கி விக்கி வந்த அந்த தளர்ந்து போன கதறல், வீதியில் சென்று கொண்டிருந்த என்னை அவர் அருகில் அழைத்துச் சென்றது.

தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும் “எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” - காசிப்பிள்ளை ஜெயவனிதாஅந்தப் போராட்டப் பந்தலில் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்திற்குத் தலைமை வகித்து, தன் மகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் காசிப்பிள்ளை ஜெயவனிதா.

அந்தத் தாயின் அருகிலே சென்று  பேச்சுக் கொடுத்த போது,

தன் பிள்ளை கடத்திச் செல்லப்பட்ட பின் மகளின் புகைப் படத்தினைப் பத்திரிகை யில் பார்த்ததாக அவர் கூறுகின்றார். ஆனால் இன்னமும் தன் பிள்ளை தன்னிடம் வரவில்லை என்றும் அவர் கலங்குகின்றார்.

மேலும் அந்தத் தாய் தன் தற்போதைய நிலையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். “நான் உங்கள் அனைவருக்கும் கூறுகின்றேன்  சற்றுக் கேளு ங்கள். இந்தச் செய்தியை உலகறியச் செய்யுங்கள். நீதி சாகாதல்லவா?”

காணாமல் ஆக்கப்பட்ட  மகளின் தாய் மேலும் கூறுகின்றார்….,

 “என்ரை பெயர் காசிப்பிள்ளை ஜெயவனிதா, பெரியமடு – நைனா மடுவில் தற்போது வசித்து வருகின்றேன். என்ரை மகள் காசிப்பிள்ளை ஜெரோமி. இவரே  இலங்கை அரச படைகளால் என் கண் முன்னே இழுத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப் பட்டுள்ளார்.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்82009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசால் முன்னெடு க்கப்பட்ட இன அழிப்புப் போரின் பின் நிர்க் கதியாகிய மக்கள், இராணுவத் தினரின் கட்டுப் பாட்டுப் பகுதிக் குள் கொண்டு வரப்பட்டனர்.

இதன் போது பிள்ளைகளுடன் இரட்டைவாய்க் கால் இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென ஓர் இராணுவ வாகனம் வந்து அப்பகுதியில் வந்தவர்களை தம் வாகனத்தில் ஏற்றி, வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

வாகனத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் அந்த இடத்தில் இறக்கி விட்டு 16 வயதான என் மூத்த மகள் ஜெரோமியை இராணுவத்தினர் வலுக் கட்டாயமாக வாகனத்தில் இழுத்து ஏற்றினார்கள். அப்பொழுது என் பிள்ளையை விடாமல், அந்த வாகனத்தில் நானும் ஏறி வருகிறேன் என  கதறினேன். பின் என்னையும், மகளையும் வாகனத்தில் கொண்டு போனார்கள்.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்7பிறகு ஒரு வயல் வெளியில் வாகனத்தை நிறுத்தி, வாகனத்தில் இருந்து என்னை அடித்து இழுத்து வயலுக்குள் தள்ளி விட்டு விட்டு, என் மகளைக் கடத்திச் சென்றார்கள். காப்பாற்று வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், என்ரை பிள்ளையைக் காப்பாற்ற முடிய வில்லை.

பின்னர் இராணுவத்தினர் அடித்த காயங்க ளுடன் நானும், எனது கணவனும் பிள்ளையை பிரிந்த கவலையோடு மற்றப் பிள்ளை களையும் பாதுகாக்க வேண்டும் என்று கருதி வவுனியா செட்டி குளத்தில் அமைக்கப் பட்ட இராமநாதன் முகாமிற்கு வந்து சேர்ந்தோம். பின்னர் பிள்ளையைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. 2009ஆம் ஆண்டு மார்கழி மாதம் முகாமில் இருந்து வெளியேறி, இன்று வவுனியா பெரியமடு, நைனா மடுவில் வசித்து வருகின்றோம்.

இந்த நிலையில், பிள்ளையை ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நடை பெற்ற நேரம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார மொன்றில் மைத்திரிபால சிறிசேனவுடன் எனது மகள் பாடசாலைச் சீருடையில் இருக்கும் புகைப் படம் ஒன்று நூறு நாட்களில் புதிய நாடு என்ற ஒரு பத்திரிகையில், வெளியாகி யிருந்தது.

அதனைப் பார்த்ததும் என் மகள் என உறுதி செய்து, என் மகளை மீட்டு எம்மிடம் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில் எவ்வளவு போராடியும் என் மகளை மீட்க முடிய வில்லை.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்10பின்னர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாக கடமை களைப் பொறுப் பேற்று யாழ்ப் பாணத்திற்கான விஜய த்தை மேற் கொண்ட போது, நான் நேரடியாக ஜனாதிபதியை சந்தி த்து, என் மகள் தேர்தல் நேரம் பாடசாலைச் சீருடையுடன் அவர் அருகாமையில் இருந்த புகைப் படங்களையும், என்னிடம் இருந்த வேறு பட ஆதாரங் களையும் காட்டி, என் மகள் என உறுதி யாகக் கூறி, மீட்டுத் தருமாறு கேட்டேன். அப்போது அவர் நான் கொழும்பிற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார்.  ஆனால் இதுவரை எதுவித நடவடிக் கையும் எடுக்க வில்லை.

என் மகளை மீட்பதற்கு  காவல் துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு என எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்தும், என் மகளை என்னால் மீட்டெடுக்க முடிய வில்லை. பதினாறு வயதில் காணாமல் போன என்ரை பிள்ளை, இப்போ எங்கே? எப்படி? இருக்கிறாள் எண்டு தெரிய வில்லை. என் பிள்ளை இருக்கிறாள் என தெரிஞ்சும் என்ரை பிள்ளைய என்னால் மீட்க முடிய வில்லை.

தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்7 1 “எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” - காசிப்பிள்ளை ஜெயவனிதாஇந்நிலையில் தான் என்னைப் போல எத்தனையோ பெற்றோர்கள் தம் பிள்ளைகளைத் தொலைத்து விட்டு இன்று தேடி அலைகின்றார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து, போராட்டம் மூலமாகவே எம் பிள்ளைகளை மீட்டு விடலாம் என்ற ஒரு எதிர் பார்ப்போடு வவுனியாவில் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவு களின் உதவியோடு போராட்டப் பந்தல் ஒன்று அமைத்து, தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப் பட்டோர் சங்கத்தின் தலைவியாக பொறுப் பேற்று, இன்று வரை இரவு பகலாக எம் பிள்ளை களுக்காகப் போராடிக் கொண்டி ருக்கிறேன்.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்9என்ரை பிள்ளையக் கடத்திக் கொண்டு போகும் போது கண் கண்ட சாட்சியங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் சாட்சியங்கள் இருந்தும் இன்று 12 வருடங்க ளாகியும் என்ரை பிள்ளையக் கண்டு பிடிக்க முடிய வில்லை. தொடர்ந்து போராடியும் இந்த அரசாங்கம் எந்த ஒரு பதிலும் இல்லாமல் மௌனமாக தான் இருக்கின்றது. அதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் வந்து எங்களுக்கு கட்டாயம் தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்கின்றோம். எம் பிள்ளைகளை எமக்கு மீட்டுத் தர வேண்டும். எனவே எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.” என்று தன் கதையைக் கூறி முடித்தார் அந்தத் தாய்.

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்6தன் மகளைக் கடத்திச் செல்லும் போது, இராணு வத்தினர் தன்னை சப்பாத்துக் கால்களால் உதை த்துத் தள்ளி விட்டு, தன் மகளை வலுக் கட்டாய மாகக் கதற கதற கொண்டு சென்றார்கள் என அந்த அம்மா கூறும் போது, பிள்ளையை என்ன  சித்திர வதை செய்தார்களோ என்ற  அச்சம், ஒரு தவிப்பு அந்தத்  தாயின்  முகத்தில்  இல்லாமல் இல்லை. அதனை என்றுமே வரிகளால் வடித்து விட முடியாது.

வலிந்து கடத்திச் செல்லப் பட்டு, காணாமல் ஆக்கப் பட்டவர்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே? அவர்களை மீட்டுக் கொடுங்கள். அவர்கள் குற்றம் இழைக்க வில்லை, குற்றமிழைத்த  கொலைக் குற்றவாளிகளை இலங்கை அரசு நிபந்தனை இன்றி விடுவிக்கின்றது.  ஆனால் தவறேதும் செய்யாமல், வலிந்து கடத்திச் செல்லப் பட்டு, காணாமல் ஆக்கப் பட்டிருக்கின் றார்கள் எம் தமிழ் உறவுகள். இவர்களுக்கான நீதி எங்கே?

சர்வதேசமே! சிறீலங்கா அரசாங்கத்திடம் எவ்வளவு கோரிக்கைகள் வைத்தும் நீதி கிடைக்க வில்லை என்பதனால் தான்   சர்வ தேசமே தமக்கு தீர்வினைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இந்த உறவுகள் நாட்களைக் கடந்தும் போராடிக் கொண்டிருக் கின்றார்கள்.

தாய் பெயர் : காசிப்பிள்ளை ஜெயவனிதா

மகன் பெயர்: காசிப்பிள்ளை ஜெரோமி (கைது  : 2009.03.04)

இடம் – பெரியமடு – நைனாமடு

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 “எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” - காசிப்பிள்ளை ஜெயவனிதா