அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் கையெழுத்து ஆவணம் மாத இறுதிக்குள் உரிய தரப்பினரிடம் கையளிக்கப்படும்; சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் கையெழுத்து ஆவணம் மாத இறுதிக்குள் உரிய தரப்பினரிடம் கையளிக்கப்படும்; சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, இந்த மாத இறுதிக்குள் உரிய தரப்பினரிடம் கையளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்தக் கையெழுத்துப் போராட்டமானது, நாடளாவிய ரீதியில் இரண்டு வாரங்களுக்கு தொடரவுள்ளதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version