Tamil News
Home செய்திகள் வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகிறது.

அதேவேளை தாதியர்கள், மருத்துவமாதுக்கள் என ஏனைய ஆளணிப் பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதநிலை காணப்படுவதால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version