இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்-4 மாதங்களில் 35 பேர் பலி

கடந்த நான்கு மாதங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 29 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் 15 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையவையாகும்.

இதேவேளை, நேற்று மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது இரு மகன்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.