Home உலகச் செய்திகள் காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்து

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்து

641 Views

யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்கு

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியினை எதிர்பார்த்துள்ளதாகப் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து இடம்பெற்றது.

அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் “இது தொடர்பில் இரண்டு நாடுகளினதும் தூதுவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியுறவுத் துறையின் சில அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது.

குறித்த அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்” எனப் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version