Tamil News
Home செய்திகள் பகிடிவதை விவகாரம்- 21 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகிடிவதை விவகாரம்- 21 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும்   சிரேஷ்ட  மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தடைக்காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளோ, மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவனை பாலசிங்கம் விடுதியில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூத்த மாணவன் ஒருவருக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீட புதுமுக மாணவனை பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் விஞ்ஞான பீட மூத்த மாணவர்கள் இருவருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்கு புதுமுக மாணவர்களை அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கலைப்பீடத்தை சேர்ந்த 18 மாணவர்களுக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version