Home உலகச் செய்திகள் ஷாஹீன் புயல் – ஈரான், ஓமன் நாடுகள் பாதிப்பு

ஷாஹீன் புயல் – ஈரான், ஓமன் நாடுகள் பாதிப்பு

ஷாஹீன் புயல்

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் புயல்  பாரசீக வளைகுடாப்  பகுதியைத் தாக்கியதில் ஈரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இதில் குறைந்தது 13 பேர்  உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் கன மழையால் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளானது.

அதே நேரம் ஈரானும் கடுமையாகப்பாதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புயல் தென் மேற்கு திசையில் நகர்ந்து நிலப்பகுதியில் நுழைந்து பலவீனமடைந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிக அவசரத் தேவை இருந்தால் ஒழிய, அல் அவின் நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புயல், நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் இயற்கை இடர் எச்சரிக்கை அமைப்பான நேஷனல் மல்டி ஹசார்ட் ஏர்லி வார்னிங் சிஸ்டம் எச்சரித்தது.

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா

Exit mobile version