இலங்கை: அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் -பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 195,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார்.

நாடும் மக்களும் 50% நெல் விளைச்சலையும் 65% முதல் 70% மக்காச்சோள விளைச்சலையும் இழந்த ஓர் இருண்ட காலத்தின் விளைவுகளை நாடு அனுபவித்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, நெல் பிரதான பயிராக இருக்கும் இந்தப் பருவத்தில் நெல் விளைச்சல் 50%க்கும் மேல் குறைவடையும் என்றும் அதற்கிணங்க, இந்த நேரத்தில் செய்ய வேண்டியது அடுத்த மகா பருவத்தை இப்போதிருந்தே மிகவும் வெற்றிகரமானதாக மாற்றி, எதிர்வரும் மகா பருவத்துக்குத் தேவையான அளவு விதை நெல்லை உற்பத்தி செய்வதாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tamil News