சோமாலியாவில் கடும் வரட்சி – பல ஆயிரம் மக்கள் இறக்கலாம்

சோமாலியாவில் கடும் வரட்சி

கடந்த நான்கு தசாப்பதங்களாக காணாத கடுமையான வரட்சி சோமாலியாவை சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளில் ஏட்பட்டுள்ளதால் பல ஆயிரம் மக்கள் பட்டினியில் இறப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான சூழ்நிலைகள்  ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பாளர் அடம் அப்துல்மோனா கடந்த புதன்கிழமை (8) தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்த வருடத்தில் அங்கு 448 பேர் இறந்துள்ளதாக வெளியிடப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியா, எதியோப்பியா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பட்டினிச்சாவை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

10 வயதுக்கு உட்பட்ட எனது நான்கு குழந்தைகள் என் கண்முன்னால் இறப்பதை நான் பார்த்தேன் என சோமாலியாவை சேர்ந்த ஒவ்லியோ ஹசன் சலாட் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நேருக்கடி, உக்ரைன் போர் மற்றும் வரட்சி என்பன ஆபிரிக்கா நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன. கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், ஏனைய உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறைகள் நிலவுகின்றன.

பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏப்பிரல் மாதம் 81,000 ஆக இருந்தபோதும் அது தற்போது 200,000 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவிலும் உட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 71 விகிதமாகவும், எதியோப்பியாவில் 27 விகிதமாகவும் உயர்ந்துள்ளதாக ஐ.நாவின் சிறுவர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

Tamil News