Tamil News
Home செய்திகள் தனிநாட்டு பிரகடனத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஸ்கொட்லாந்து ஆர்வம்

தனிநாட்டு பிரகடனத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஸ்கொட்லாந்து ஆர்வம்

பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்து சென்ற பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ளதாக அதன் முதல் அமைச்சர் ஹம்சா யூசாப் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற தனிநாட்டுக்கான வாக்கெடுப்பில் மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து தோல்வி கண்டபோதும், மீண்டும் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்தின் அரசியல் கட்சிகள் முயன்றுவருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது ஸ்கொட்லாந்து மக்கள் 62 வாக்குகளை எதிராக அளித்திருந்தனர். எனவே 2016 ஆம் ஆண்டு என்ன நிகழப்போகின்றது என அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால் நாம் தனிநாட்டுக்கான வாக்கொடுப்பில் வெற்றி பெற்றிருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரின் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் முன்னாள் முதல்வர் ஸ்ரேஹனும், அவரது கணவர் பிற்றர் முரேலும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் விசாரணைகள் தொடர்கின்றன. ஸ்ரேஹனே 2014 ஆம் ஆண்டு தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தியிருந்தார். தற்போது அவரின் கைது கட்சிக்கான ஆதரவை குறைக்கலாம் என கருதப்படுகின்றது.

Exit mobile version