இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தொடரும் சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பயிற்சியினை மீள் பரிசீலனை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டிலிருந்து அழைப்பு விடுத்து வந்த எம்மைப்போன்றவர்களுக்கு கிடைத்த ஓர் வெற்றியாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2021 11 24 at 11.37.38 PM இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இது தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலங்கையில் பல தசாப்தங்களாக சித்திரவதையானது குறைவடையாமல் தொடர்ந்திருக்கின்றது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தப் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்ட்கொட்லாந்தில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். 2016 இலங்கையானது பெயர் போன சித்திரவதை இடத்திற்குப் பொறுப்பாக இருந்த ஓர் காவல்துறை அதிகாரியை ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் கூட்டத்திற்கு தனது பிரதிநிதியாக அனுப்பும் துணிவைக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டதில் இலங்கை அதிகாரிகள் சித்திரவதை இடம்பெறுவதை மறுத்ததுடன் யுகேயினுடைய பயிற்சி காரணமாக நம்பகத்தன்மையையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் பயிற்சிகளுக்கு மத்தியிலும் இலங்கையில் காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் சிததிரவதை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகமானது திட்டமிட்ட மீறல்களை நிறுத்த உதவி செய்யாத ஆதரவுப் பயிற்சிகள் மற்றும் ஆளுமைகளைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு மட்டுமே தொடர்ந்தும் நிதி வழங்குவதை விடுத்து சித்திரவதைக்கான பொறுப்புக்கூரல் தொடர்பில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்”