ஆப்கானில் பள்ளி திறப்பு-  மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிப்பு

ஆசிரியைகளுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்ளுக்குச் செல்ல மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்றும் தலிபான்கள்  அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட  சிறுமி ஒருவர் சர்வதேச செய்தி நிறவனமான பிபிசியிடம் கருத்துக் கூறுகையில்,

‘எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது’  என்று கூறியுள்ள அதே நேரம் அவர்கள் வாழ்வு நாசமாக்கப்படுவதாக ஏனைய மாணவிகள்  தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களை பள்ளி சென்று படிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகத்  தெரிவித்திருந்தனர்.

தற்போது,“பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தானின் பக்தர் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021