Tamil News
Home செய்திகள் தமிழர் நிலப் பிரதேசங்களை பறித்தெடுக்கவே தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது

தமிழர் நிலப் பிரதேசங்களை பறித்தெடுக்கவே தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது

தமிழர் நிலப்பிரதேசங்களை பறித்தெடுக்கவே  தமிழர்கள் அல்லாத தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாம் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும், தமிழ்பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதற்கு இனிமேல் அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு விகாராதிபதியுடன் நான் கூறியுள்ளேன் என தமிழ் தேசியகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பார் இரா சாணக்கியன்தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியில் அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இக்கருத்தினை தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மத்தியில் அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் வேத்துச்சேனைசம்பவத்தை கேள்விப்பட்டவுடன் பல்வேறு அரசியல்வாதிகளும் புத்தபிக்குவும் வந்திருந்தனர். இவர்களைப்பார்த்து மக்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டவேண்டாம் என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். அங்குள்ள மக்கள் தமிழ் தேசியகூட்டமைப்பில் மாத்திரமே நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்நம்பிக்கையினை நாம்காப்பாற்றுவோம் குறிப்பிட்டகாணிதொடர்பாக நாம் வழக்கு தொடரவுள்ளோம்.அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழர் நிலப்பிரதேசங்களை பறித்தெடுக்கவே  தமிழர்கள் அல்லாத தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாம் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்.

பொலிஸார் எனக்கு நீதிமன்ற உத்தரவொன்றினை வழங்கியுள்ளனர் இவ்நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நான் வெல்லாவெளிப்பகுதிக்கு செல்லமுடியாது அங்கு சென்றால் என்னை கைது செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனது தேர்தல்பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸாரை் செய்த திட்டமிட்ட செயல் இது என நான் கருகின்றேன்.

இன்று சில உதிரிக்கட்சிகளினதும் பேரினவாத கட்சிகளினதும் வேட்பாளர்கள் கூறுகின்றார்கள்  கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைப்பெறுமாம்?  இப்படிக்கூறும் வேட்பாளர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களே வாக்களிக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

 

Exit mobile version