கிழக்கு மாகாணத்திலிருந்து மாலைதீவுக்கு மணல் திருட்டு சாணக்கியன் குற்றச்சாட்டு-அமைச்சர் மஹிந்த அமரவீர மறுப்பு

மாலைதீவுக்கு மணல் திருட்டு

மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக, மாலைதீவுக்கு மணல் திருட்டு: கிழக்கு மாகாணத்திலிருந்து மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக மணல் திருட்டப்பட்டு, வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ ஈடுபட்டுள்ளார் என்பதை சாணக்கியன் நிரூபித்துக்காட்டினால், இந்த அமைச்சுப்பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தாம் விலகுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் தாம் தனது கருத்துக்களை முன்வைப்பதாகவும், நாட்டின் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கமைய நாட்டின் வளங்களை எந்த வகையிலும் சட்டவிரோதமாக வெளியிடவோ, விற்கவோ அல்லது கடத்துவதற்கோ முடியாது என்றும் அமரவீர கூறினார்.

நமது கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமானால், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாலைதீவில் நீர் வடிகட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடந்த பருவத்தில் ஆறரை க்யூப் மணல் அனுப்பப்பட்டதை அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இது ஒரு இலங்கை நிறுவனத்தால் அனுப்பப்பட்டது. இதற்கான அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டுள்ளன என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021