Tamil News
Home செய்திகள் ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை -சம்பந்தன்

ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை -சம்பந்தன்

ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை என கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். நேற்று மாலை தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை எனக்கு தெரிவித்தார் என சோனியா சர்கார் என்ற வெளிநாட்டு செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆட்சியில் சர்வாதிகரபோக்கினை கொண்டுவந்தமை போன்ற ஏற்றுக் கொள்ளமுடியாத விடயங்களை அவர்கள் செய்ததன் காரணமாகவே நாங்கள் 2015 இல் அவர்களை எதிர்த்தோம் என அவர் குறிப்பிட்டார் என அந்த செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராஜபக்ச சகோதரர்கள் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுவை கைவிடுவதற்கான நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள் நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிட முயன்றனர் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ராஜபக்சாக்கள் நாட்டை முன்னேற்றகரமான விதத்தில் ஆட்சி செய்தால் நாங்கள் அவர்களை எதிர்க்கமாட்டோம் என சம்பந்தன் தெரிவித்தார்,தற்போது எங்கள் தீர்மானங்கள் சில கொள்கைகளின் அடிப்படையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் என சோனியா சர்கார் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version