Home செய்திகள் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

SAMPANTHAN025 நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யு மான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க் கிழமை சக்கர நாற்காலியில் வருகை தந்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ ர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. பாராளுமன்றம் கூடிய சிறிது நேர த்தில் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபை க்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழைத்து சென்ற பாராளுமன்ற உதவியாளர்கள் மீண்டும் அவரை கைத்தாங்கலாக சபைக்குள் அழைத்து வந்தனர்.

தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார். சம்பந்தன் உள்ளே வரும் போதே அவரின் ஆசனத்துக்கு பக்கத்து ஆசனக்காரரான ரணில் விக்கி ரமசிங்க ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். அவர் சம்பந்தன் வருவதனை அவதா னித்து அவருக்கு உதவும் வகையில் சம்பந்தன் அமர வசதியாக அவரது ஆசனத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.

சம்பந்தன் தன் ஆசனத்துக்கு வந்ததும் சபாநாயகருக்கு தலை வணங்கி மரியாதை கொடுத்து விட்டே தனது ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறிது நேரம் பேசி விட்டு அதனையடுத்து சுமந்திரன் எம்.பி.யை அழைத்து தனக்கு அருகில் அமர வைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version