தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் விசாவாசிகளுக்கு மறுக்கப்படுவது ஏன்?

அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் விசாவாசிகளுக்கு

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் விசாவாசிகளுக்கு மறுக்கப்படுவது ஏன்? அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள விக்டர் எல்லைகள் திறப்பதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விசாவாசிகளில் ஒருவராவார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிக்கோவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க டிசம்பர் மாதம் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால், எல்லைகள் திறக்கப்பட்டாலும் அவுஸ்திரேலியர்களும் நிரந்தர வசிக்கும் உரிமைப் பெற்றவர்களும் மட்டுமே வெளிநாடுகள் சென்று வர முடியும் எனும் அவுஸ்திரேலிய அரசின் சமீபத்திய அறிவிப்பு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் இதே நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விசாவாசிகளுக்கு ஏன் இல்லை என்பதே விக்டரின் கேள்வியாக இருக்கிறது.

“அவுஸ்திரேலியாவில் தான் நாங்கள் வாழ்கிறோம், உழைக்கிறோம், வரிச் செலுத்துகிறோம்,” என்பது விக்டரின் கேள்வி மட்டுமல்ல, அவுஸ்திரேலியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தற்காலிக விசாவாசிகளின் கேள்வியாகவும் இருக்கிறது.

ilakku-weekly-epaper-150-october-03-2021