Tamil News
Home செய்திகள் விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதாக சமந்தா பவர் அறிவிப்பு

விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதாக சமந்தா பவர் அறிவிப்பு

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்றைய தினம் ஜா எல சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயத்தின் போது எதிர்கொள்ள நேரிட்ட பல்வேறு சவால்கள் தொடர்பில் விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில், நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் அறிவித்துள்ளார்.

சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version