அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை

‘இலங்கையில் 400 கிராம் உப்பு பைக்கற் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளது’ என்று வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை இலங்கை சந்தையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.
நாட்டில் வருடாந்த உப்பின் நுகர்வு சுமார் 80,000 மெற்றிக் தொன்னாகும்.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உப்பு உற்பத்தி வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும்இ நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகஇ 15 வருடங்களின் பின்னர் நாட்டின் பொது பாவனைக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

அதன்படி இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுவதுடன் அதற்கான சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ‘தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் உப்புப் பொதி இலங்கை சந்தையில் 150 ரூபா தொடக்கம் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது’ என்று வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்

Exit mobile version