ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு நேட்டோவுக்கு ஆபத்தாம்

ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு

அண்மைக் காலமாக ரஸ்யா தனது நகர்வுகளை ஆபிரிக்க நாடுகளை நோக்கி விஸ்தரித்து வருவது மேற்குலக நாடுகளின் நேட்டோ கூட்டமைப்புக்கு மிகவும் ஆபத்தானது என பிரித்தானியாவும், ஸ்பெயினும் கூட்டாக தெரிவித்துள்ளன.

கடந்த புதன்கிழமை (25) ஸ்பெயின் தலைநகரில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவின் அரச படையினரும், வக்னர் குழு போன்ற தனியார் பாதுகாப்பு படையினரும் மாலி மற்றும் லிபியா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரொபிள் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கத நாடுகளில் அரசியல் உறுதித்தன்மையும், வறுமையும் அதிகரித்து வருகின்றது. எனவே மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்வதையும் ரஸ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூட பல நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து போலந்து எல்லையின் ஊடாக ஐரோப்பாவை வந்தடைய முற்பட்டது பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. ரஸ்யாவின் கடற்படை தான் மிகவும் ஆபத்தானது. அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News