Tamil News
Home செய்திகள் சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக்கு தானே வருகை தரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றின் பாதுகாப்பும் அங்கு எந்தவித புதிய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது முக்கியம் என்றும் ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அணுசக்தி ஆலைக்கு அருகில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்தும் தாக்குதல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version