அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து ரஸ்யா வெளியேறுகின்றது

உக்ரைன் படை  நடைவடிகையினால் ஏற்பட்ட விரிசல்களைத் தொடர்ந்து அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து ரஸ்யா வெளியேறுவதாக ரஸ்யாவின் விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுடன் விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளதானது, அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இது தொடர்பில் தாம் கவலை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் நெற் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்கு பின்னர் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் இருந்த இறுதியான தொடர்பும் ரஸ்யாவின் இந்த நடைவடிக்கையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் விண்வெளியில் மேற்கொள்ளப்படும் முக்கிய ஆய்வுகள் பாதிக்கப்படும் என அமெரிக்கா அச்சமடைந்துள்ளது.

ஆனால் தாம் தனியாக விண்வெளி நடைவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.