உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்த பள்ளியில் ரஷ்யா தாக்குதல் – 60க்கும் மேற்பட்டோர் பலி

மக்கள் தஞ்சம் அடைந்த பள்ளியில் ரஷ்யா தாக்குதல்

கிழக்கு  உக்ரைன் பகுதியின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தப் பள்ளியில் உக்ரைன்  கிராமவாசிகள் 90 பேர் வரை தஞ்சமடைந்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம்திகதி அன்று  தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்றளவும்  தொடர்கின்றது.

இந்நிலையில், குறித்த இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பள்ளி கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அணைக்க தீயணைப்பு படையினர் 3 மணிநேரத்திற்கும் மேல் போராடினர் என லூஹான்ஸ்கின் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும்  கட்டிட இடிபாடுகள்  மொத்தமாக அகற்றப்பட்டவுடன் இந்த சம்பவத்தில்  எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை சரியாக சொல்ல முடியும்,” என லூஹான்ஸ்கின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய தரப்பிலிருந்து  எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதே நேரம் கடந்த சில நாட்களாக லுஹான்ஸ்கில் உள்ள பாபாஸ்னா என்ற இடத்தில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News