இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்ட ரோஹிங்கியா அகதி பெண்: அச்சத்தில் ரோஹிங்கியா அகதிகள்

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் தஞ்சமடைந்திருந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண் அகதியாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் சமீபத்தில் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப் பட்டுள்ளார்.

இந்த சூழலினால் மேலும் பல அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய அரசு தயாராகிறது என்ற அச்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இடையே எழுந்திருக்கிறது.

மியான்மருக்கு நாடுகடத்தப்பட்ட 37 வயதான ஹசினா பேகம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்முவில் கைது செய்யப்பட்ட 170 அகதிகளில் ஒருவராவார். மியான்மரில் இனப்படுகொலையை எதிர்கொள்ளும் மக்களாக உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் இவ்வாறு நாடுகடத்தப்படுவது அவர்களது இருப்பை கேள்விக்குறியாக்கும் என்ற அச்சமும் மேலெழுந்துள்ளது.

Tamil News