‘டோக்கியோ ஒலிம்பிக்கில் தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது’ – WHO எச்சரிக்கை

Tedros Adhanom Ghebreyesus 1 'டோக்கியோ ஒலிம்பிக்கில் தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது' - WHO எச்சரிக்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் கோவிட்-19 தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus ) எச்சரித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், ஒலிம்பிக்குடன் தொடர்புடைய போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் 79 பேருக்கு ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் காரணமாக சில போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் போட்டி இடம் பெறவுள்ள பகுதியில் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் உட்பட 11,000 பேர் தங்கவுள்ளனர்.

இந் நிலையிலேயே சர்வதேச ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவா், “தொற்று நோயைக் சரியாகக் கையாள்வதிலேயே ஒலிம்பிக் வெற்றி தங்கியுள்ளது.

தொற்று நோயாளர்களை கண்டறித்து தடமறிதல், தனிமைப்படுத்துதல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் ஒலிம்பிக்கில் நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது. எனினும் இயன்ற வரை பாதுகாப்பாக போட்டிகளை நடத்த வேண்டும்.

ஆபத்தே இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஜப்பான் முழு உலகிற்கும் தைரியத்தைத் தருகிறது. இதேவேளை, கோவிட் 19 தடுப்பூசி பகிர்வில் ஏழை நாடுகளுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

தங்களது நாடுகளில் மட்டும் முழுமையாகத் தடுப்பூசி போட்டு தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும் என செல்வந்த நாடுகள் நினைக்க கூடாது.

உலகளவில் இதுவரை பகிரப்பட்ட தடுப்பூசிகளில் 75 வீதம் 10 நாடுகளுக்கே கிடைத்துள்ளன.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் குறைந்தது 70 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021