Home செய்திகள் ஓன்டாரியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – இலங்கை மீண்டும் கவலை

ஓன்டாரியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – இலங்கை மீண்டும் கவலை

இலங்கை மீண்டும் கவலை


ஓன்டாரியோ சட்டசபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கனடா தூதுவரிடம் இலங்கை மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினனை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் சந்தித்து கலந்துரையாடிய போது இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

ஒன்டாரியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி உறுப்பினர் பொது சட்டமூலம் குறித்து மீண்டும் இலங்கையின் கரிசனை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக ஒன்டாரியோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தான் சுட்டிக்காட்டியதை போல தசாப்தகால மோதலின் பின் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version