Home செய்திகள் தமிழ்நாடு: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி தீர்மானம்

தமிழ்நாடு: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி தீர்மானம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து: இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதிக்கு முன், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் முஸ்லீம்கள் அல்லாத மத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

அதே சமயம், இச்சட்டம் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை, இலங்கைத் தமிழ் அகதிகளை குடியுரிமை வழங்கும் பட்டியலில் உள்ளடக்கவில்லை. அந்த வகையில் முஸ்லீம்களை மத ரீதியாக நிராகரிக்கும் சட்டமாக இது உள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

Exit mobile version