தடைகளை அகற்றுங்கள்- பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைகின்றோம்- ஈரான்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில்

தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று ஈரான் நாட்டின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா  கூறியுள்ளார்.

1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

இதில் உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள ஈரான்,  கடந்த  2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேராத சில நாடுகளில்  ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், “உலகின் வேறு எந்தப் பகுதியையும் போலவே இரானும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்த சாலாஜெகா, ஒடுக்குமுறை தன்மையுள்ள தடைகள் அமலில் உள்ள நிலையில், எந்தவிதமான இறக்குமதியும் செய்ய முடிவதில்லை. அடிப்படை மனித உரிமையான மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை,” என்கிறார்

மேலும்  இந்த தடைகளை அகற்றினால்  பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்றார்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad தடைகளை அகற்றுங்கள்- பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைகின்றோம்- ஈரான்
நன்றி- பிபிசி தமிழ்