மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு உள்ளானவர்களை நினைவு கூரும் நாள் இன்று

lanka1 1611017200 1 மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு உள்ளானவர்களை நினைவு கூரும் நாள் இன்று

ஐக்கிய நாடுகள் சபை, ஓகஸ்ட் 22ம் திகதியை  “மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில்  பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்” என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நாள், மத சிறுபான்மையினருக்கு, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் பாதிப்பு ஏற்படுவதை கண்டிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகார பூர்வமாக கடைபிடிக்கப்படும் மத நம்பிக்கைகளினால் இலட்சக்கணக்கான மக்கள் வன்முறை சூழலில், சிக்கும் அவலமான நிலையே உள்ளது.

மதத்தினை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவிலும் கூட,  இன்று ஆளக்கூடிய இந்து மத நம்பிக்கையுடடைய கட்சியினால் முஸ்லீம் மக்கள் கலாசார ரீதி மற்றும் உணவு ரீதியாக அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

அதே போல், இலங்கையைப் பொறுத்தமட்டில், மதம் என்பது  திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பின் ஓர் வடிவமாக உள்ளதோடு தமிழர்களை ஒடுக்கி ஆள்வதற்கும் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021