இன்று தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் இன்று  தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் திகதி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இது தொடர்பில் நடந்து வந்த வழக்கில் தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை- இன்று தூக்கிலிட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து குறித்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

Tamil News