அவுஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை

8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை

அவுஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை: அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் அவுஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக நவுரு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த அகதிகள் அங்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலைக்காக அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னில் உள்ள பார்க்   தங்கும் விடுதியில் 5 அகதிகளும் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அகதியும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பிலிருந்து என்னுடைய சில நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றி எங்களது விடுதலைக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே உரித்தானது. அவர்களின் உதவியை எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்,” என ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் தனுஷ் செல்வராசா எனும் இலங்கைத் தமிழ் அகதி.

தற்போது விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை, சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பார்க் தங்கும் விடுதியில் இன்னும் 36 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad அவுஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை