Home செய்திகள் சர்வதேசத்திடம் நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சர்வதேசத்திடம் நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

DSC04850 சர்வதேசத்திடம் நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.00 மணிக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.

“எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும்  பதாதைகளை தாங்கியவாறும்  ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், உள்ளூரில் போராடிய நாங்கள் இப்போது சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றோம். இனியும் காலம் கடத்தாது எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்.

கோவிட் – 19 காலத்திலும் எமது உயிர்கள் போனாலும் பரவாயில்லை எமது உறவுகள் தான் வேண்டும். எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் மாதம் மாதம் சட்டங்களை மதித்து போராடி வருகின்றோம். சர்வதேசமே கண்விழித்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் என தெரிவித்தனர்.

Exit mobile version