Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் | October 3, 2023
Home செய்திகள் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் அரிக்கன் விளக்குடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்  வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, நாம் போராட்டம் ஆரம்பிக்கும் போது அரிக்கன் விளக்குகளையே பயன்படுத்தினோம். எனினும் எமது போராட்ட இடத்துக்கு மின்சார சபையே  மின்சாரம் வழங்கியது.

தற்போது மின்சாரசபை அதனை நிறுத்தியதுடன் எமது போராட்டத்தை குலைக்க இந்த அராசங்கம் அடாத்தாக, எம்மை கைது செய்தது. ஆனாலும் எமது போராட்டம் தொடரும் என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க உதவியை கோரியதுடன், இந்திய பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் அமெரிக்கா, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version