Home செய்திகள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைககளை ஏற்க மறுக்கும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? அம்பிகா சற்குணநாதன்

நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைககளை ஏற்க மறுக்கும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? அம்பிகா சற்குணநாதன்

நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

உண்மை மற்றும் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெண்கள் முதியவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அவர்களை பொய்யர்கள் என தெரிவிக்கும் படையினரை பயன்படுத்தி துன்புறுத்தும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்

தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

உண்மை மற்றும் நீதியை கோரி மழையில் பேரணியாக சென்றவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் பல முதியர்வர்கள்-பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்த மக்களை பொய்யர்கள் என முத்திரை குத்தும், அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டார்கள் என தெரிவிக்கும், அவர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும், அவர்களை கண்காணிப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் படையினரை பயன்படுத்தும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? என மேலும் அவர்  பதிவிட்டுள்ளார்.

Exit mobile version