Home செய்திகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவை தரமிறக்க பரிந்துரை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவை தரமிறக்க பரிந்துரை

மனித உரிமைகள் ஆணைக் குழுவை தரமிறக்க

ஒக்ரோபரில் நடந்த அதன் மெய்நிகர் அமைர்வில், தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகலாவிய கூட்டணியின் அங்கீகாரத்திற்கான துணைக்குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் திருப்தியற்ற செயல்திறன் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக் குழுவை தரமிறக்க அதாவது பி அந்தஸ்துக்கு தரமிறக்க பரிந்துரைத்திருக்கிறது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தற்போது ஏ அந்தஸ்தைப்பெற்றுள்ளது. இருப்பினும் தரமிறக்குதல் 2022 இல் ஒரு வருடத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வராது என்று துணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இடைக்காலமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பாரிஸ்கோட்பாடுகளுடன் தொடர்ந்தும் இணக்கமாக இருப்பதை உறுதிபடுத்த தேவையான ஆவணரீதியான ஆதாரங்களை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

2021 பெப்ரவரியில் ஆணைக்குழுவின் குறைபாடுள்ள நியமன செய்முறை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் அலுவலர்களில் பன்மைத்தன்மையின்மை அதன் மனித உரிமை ஆணையை நிறைவேற்றுவதில் அதன் பயனற்ற தன்மை குறித்து சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து கடிதப் பரிமாற்றங்களைப் பெற்றதாக உப குழுகூறியுள்ளது.

Exit mobile version