எதியோப்பியா விவகாரம் – அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை

எதியோப்பியா விவகாரம்

எதியோப்பியா விவகாரம்: எதியோப்பியாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றியுள்ளது.

47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இந்த ஆணைக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 21 நாடுகள் ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 11 நாடுகள் கலந்து கொள்ளவில்லை.

எல்லா தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் நடா அல்- நசீப் தெரிவித்துள்ளார்.

எமக்கு தொடர்ச்சியாக காத்திரமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அங்கு மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பிராந்தியத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கவனம் செலுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள எதியோப்பியா அரசு அதற்கு எதிராக வாக்களிக்குமாறும் ஏனைய நாடுகளை கேட்டிருந்தது.

Tamil News